ஒரே நேரம்- ஒரே உள்கட்டமைப்பு...இரண்டு விதமான ரயில் சேவைகள் தொடக்கம்! - சிறப்பு தொகுப்பு
Mar 15, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நேரம்- ஒரே உள்கட்டமைப்பு…இரண்டு விதமான ரயில் சேவைகள் தொடக்கம்! – சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 26, 2026, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புது டெல்லி மற்றும் மீரட்டை இணைக்கும் நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து வழித்தடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரே உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி இரண்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

நமோ பாரத் என்பது இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான RRTS ஆகும். RRTS என்பது NCR-எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் ஒரு அரை-அதிவேக பிராந்திய ரயில் அமைப்பாகும். பயண நேரம் மற்றும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக நகர்ப்புற போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பிராந்திய போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப் பட்டுள்ளது.

நமோ பாரத் என்பது சாஹிபாபாத், காசியாபாத், மோடிநகர் மற்றும் மீரட் போன்ற முக்கிய நகர்ப்புற மையங்களை டெல்லியுடன் வேகமான வேகத்தில் இணைக்கும் இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பாகும்.

புது டெல்லியில் உள்ள சராய் காலே கானை வடக்கு மீரட்டில் உள்ள மோடிபுரத்துடன் இணைக்கும் 82 கிலோமீட்டர் நீளமான இந்த வழித் தடம், தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தால் கட்டப்பட்டுள்ளது.

RRTS ரயில்கள் நீண்ட தூரம் மற்றும் அதிக வேகத்திற்காக கட்டமைக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்கள் குறுகிய, அடிக்கடி நகர்ப்புற நிறுத்தங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன

முதல்முறையாக RRTS ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஒரே உள்கட்டமைப்பை ஒரே தடத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் ரோலிங் ஸ்டாக் எனப் படும் பெட்டிகள் வேறுபட்டவை. இப்படி RRTS மற்றும் மெட்ரோ ஒரே பாதைகளைப் பகிர்ந்து கொள்வது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

RRTS மற்றும் மெட்ரோ ஆகிய இரண்டு அமைப்புகளையும் பாதுகாப்பாகக் கையாள இந்த நடைபாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீரட்டில் இருந்து பயணிகள், மெட்ரோவைப் பயன்படுத்தி நகரத்துக்குள் பயணிக்க முடியும். மேலும், உடனடியாக நமோ பாரத் ரயில்களில் ஏறி புது டெல்லிக்கும் பயணிக்கலாம்.

வழக்கமான மெட்ரோவை விட அதிவேகமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் நமோ பாரத் ரயில், 82 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 55 நிமிடங்களில் கடந்து பயண நேரத்தை வெகுவாக குறைக்கிறது. இதுவே சாலை வழியாக புது டெல்லியில் இருந்து மீரட் செல்வதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

70 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல்மட்ட பாலத்திலும் 12 கிலோமீட்டர் தூரத்துக்குச் சுரங்கப்பாதையிலும் செல்லும் இந்த நமோ பாரத் ரயில், மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட நீண்ட வழித்தடத்தில் செல்கிறது.

அதேபோல் தெற்கு மீரட் முதல் மோடிபுரம் வரை 13 நிலையங்களுடன் சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தையும் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் முழு நகரத்தையும் இணைக்கும் மீரட் மெட்ரோவில் பயண நேரம் வெறும் 30 நிமிடங்களே.

அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்தைப் பொறுத்து, மேலும் புதிய பாதைகள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியின் சராய் காலே கானில் இருந்து இரண்டு புதிய விரைவு ரயில் வழித்தடங்களுக்கான திட்டதுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

சராய் காலே கானில் இருந்து ஹரியானாவின் கர்னல் வரை சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தை சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கடக்க கூடிய ஒரு நமோ பாரத் வழித்தடமும், சராய் காலே கானை ஹரியானாவின் பாபர்பூர் மற்றும் ராஜஸ்தானின் நீம்ரானாவுடன் இணைக்கும் மற்றொரு வழித் தடமும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: nationinfrastructurecountry'ssimultaneouslydedicatednamo harathLAUNCHexpress trainprime minister modiNew Delhi
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனை!

Next Post

இந்தியாவை மீண்டும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் – பாகிஸ்தானுக்கு மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எச்சரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies