கோவில்பட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் மதன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தியது,
இதில் அனைவரும் தப்பியோடிய நிலையில் மதன்ராஜ் மட்டும் நிலதடுமாறி கீழே விழுந்தார்.
அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் பள்ளி சிறுவர்களின் பிரச்னைக்கு ஆதரவு தெரிவித்ததால் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
















