குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரசந்த் இலகுரக போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக பயணித்தார்.
ஏற்கனவே, ரஃபேல் மற்றும் சுகோய்-30 எம்கேஐ ஆகிய போர் விமானங்களில் பயணம் செய்துள்ள முர்மு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு போர் விமானத்தில் பறக்கும் முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் விமானப் படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட அவர், நகரின் முக்கிய இடங்களை வான்வழியாகப் பார்வையிட்டார்.
ஆலிவ் பச்சை நிற விமான உடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்த குடியரசுத் தலைவர், சுமார் 25 நிமிடம் வான்வழி பயணத்தை மேற்கொண்டார்.
















