மாசிமக விழாவை ஒட்டி, சென்னை குன்றத்தூர் முருகன் கோயிலில், தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற குன்றத்தூர் முருகன் கோயிலில், கடந்த வாரம் மாசிமக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நடைபெற்றது.
இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் மாட வீதியாக வழியாக வலம் வந்தார்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.
















