அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா? என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில் வைரலாகி வருகிறது.
மதுரையில் தாய்க்கிழவி படத்தை பார்த்த பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா? என சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தான் ஒரு குட்டி கம்பெனி வைத்து சின்ன படங்களை தயாரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் பெரிய நிறுவனமாக வளர்கையில் அஜித் சார் விருப்பப்பட்டால் நிச்சயம் அவரை வைத்து படம் தயாரிப்பேன் எனவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
















