பேபி பிரம்மோஸ் பினாகா - இந்தியாவிடமிருந்து வாங்க ஆர்வம் காட்டும் பிரான்ஸ்!
Sep 12, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேபி பிரம்மோஸ் பினாகா – இந்தியாவிடமிருந்து வாங்க ஆர்வம் காட்டும் பிரான்ஸ்!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 09:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பேபி பிரம்மோஸ் என்று அழைக்கப்படும் பினாகா ராக்கெட் லாஞ்ச் சிஸ்டம் என்ற ஏவுகணை தளத்தைக் கொள்முதல் செய்ய பிரான்ஸ், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நிலையை மாற்றியமைத்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி கடந்த 11 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

ஆப்ரேஷன் சிந்தூரில், இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் அதிரடி தாக்குதல்களைக் கண்டு உலகமே வியந்தது.

குறிப்பாக, சீனா மற்றும் துருக்கியில் இருந்து வாங்கி பாகிஸ்தான் பயன்படுத்திய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் நடுவானிலே இடைமறித்து அழித்து தனது இராணுவ வலிமையை இந்தியா உலகத்துக்கு காட்டியது.

இந்நிலையில் இந்தியாவின் பினாகா ராக்கெட் லாஞ்ச் சிஸ்டத்தை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பினாகா மல்டிபிள் ராக்கெட் லாஞ்ச் சிஸ்டம் என்பது நீண்ட தூர பீரங்கி ஆயுதமாகும். பினாகா என்பது ஒரு வழிகாட்டப்பட்ட திட-எரிபொருள் ஏவுகணையாகும். இது விரைவாக அதேநேரம் அதிக ஆற்றலுடன் சுடும் சக்தியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன ராக்கெட் லாஞ்ச் சிஸ்டத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO உருவாக்கியுள்ளது.

பேராற்றல் மற்றும் துல்லியத்தைக் குறிக்கும் சிவபெருமானின் வில்லான பினாகா என்று பெயரிடப் பட்டுள்ள பினாகா MK I மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர், 40 கிலோ மீட்டர் வரம்பு கொண்டதாகும். அடுத்து உருவாக்கப்பட்ட பினாகா MK II 90 கிலோமீட்டர் வரம்பு கொண்டதாகும்.

மேம்படுத்தப்பட்ட பினாகா MK III 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கியழிக்கும் திறன் கொண்டதாகும்.

இது 250 கிலோ எடையுள்ள ஏவுகணைகளைச் சுமந்து சென்று எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை அழிக்கும் திறன் கொண்டதாகும்.

ஏற்கெனவே உள்ள பினாகா ஏவுகணை தளத்தில் இருந்தே பினாகா MK III யை ஏவ முடியும் என்பதால் கூடுதல் செலவுகள் இல்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

ஒவ்வொரு ஏவுகணையும் 8 வழிகாட்டப்பட்ட ராக்கெட்டுகளைச் சுமந்து சென்று 700க்கு 500 மீட்டர் கொண்ட பரப்பளவை 44 வினாடிகளில் அழிக்கும் திறன் கொண்டதாகும்.

அதாவது பினாகா ராக்கெட் லாஞ்சர் 44 வினாடிகளில் ஒரே நேரத்தில் 72 ராக்கெட்டுகளை வெவ்வேறு இலக்குகளைக் குறிவைத்து ஏவும் ஆற்றல் கொண்டதாகும்.

ஜிபிஎஸ் வசதியுடன் ஏற்கனவே ஒரு வழிகாட்டப்பட்ட அமைப்பு நிறுவப்பட்டுள்ள இந்த பினாகா ஏவுகணைகள் மணிக்கு 5,800 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து தாக்குதல் நடத்துவதால், பினகாவை இடைமறித்து அழிப்பது சாத்தியமே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் எதிரி நாட்டு பீரங்கிகள், எதிரியின் விமானப் படை தளங்கள் மற்றும் எதிரியின் ராணுவத் துருப்புகளின் நிலைக் களங்களைத் தாக்கி அழிப்பதற்கு பினாகா சிறந்த ஆயுதமாக உள்ளது.

பினாகாவை ஒரு “துல்லியமான ஷாட்கன் ஷெல்” என்று கூறினால் பிரம்மோஸ் ஒரு “சூப்பர்சோனிக் ஸ்னைப்பர் ரைபிள்” ஆகும்.

மேலும், பிரமோஸுக்கும் பினாகாவுக்கும் இடையே உற்பத்தி செலவில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஒரு பிரம்மோஸ் ஏவுகணையின் விலை சுமார் 40 கோடி ரூபாயாகும். அதே நேரத்தில் ஒரு பினாகா ராக்கெட் லாஞ்ச் சிஸ்டத்தின் விலை வெறும் 2.3 கோடி ரூபாய் மட்டுமே.

பினாகாவின் ஆற்றல் மற்றும் துல்லியம் மட்டுமில்லாமல் இந்தக் குறைந்த விலையே சர்வதேச நாடுகளுக்கு பினாகாவை வாங்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

பிரான்சிடமிருந்து சுமார் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 114 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா தயாராகி வருகிறது.

அதே நேரத்தில், 2027ம் ஆண்டுக்குள் ஓய்வு பெறவிருக்கும் அமெரிக்காவின் M270 LANCE ராக்கெட் அமைப்புக்கு மாற்றாக இந்தியாவின் பினாகா ராக்கெட் அமைப்பை வாங்க பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Indiaindian armyInterestBrahmosarmy newsPinakaFrance
Share
Tweet
SendShare
Previous Post

அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா? – சிவகாரத்திகேயன் அளித்த பதில்

Next Post

தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் – மதுரை விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies