தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பழமை வாய்ந்த சிவாலயமாக கருதப்படும் இந்த கோயிலில் கடந்த 21ம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றில் இருந்து ஒவ்வொரு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிலையில் 7ம் நாள் திருவிழாவை ஒட்டி சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது,
இதில் ஒன்றரை டன் அளவில் மலர்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
















