சென்னை அம்பத்தூரில், இரவில் அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகையை மர்ம நபர்கள் பெயர்த்து தள்ளிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அம்பத்தூர் பட்டறைவாக்கம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள நியாய விலை கடை அருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகையை மர்ம நபர்கள் கீழே தள்ளியதுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் பொதுநல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
















