முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்க ஜரிகை பட்டுப் புடவைக்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த நெசவாளரும், அதிமுக பிரமுகருமான செல்வராஜ், இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்டோர் உருவம் இடம்பெற்றது போன்ற 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஜரிகை பட்டுப் புடவைகளை ஓ.பன்னீர்செல்வம் வாங்கியதாகவும் அதற்கான பணத்தை அவர் இன்னும் வழங்கவில்லை எனவும் செல்வராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
















