பாகிஸ்தானின் கராச்சியில் அமெரிக்க தூதரகத்தை சேதப்படுத்திய கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானின், கராச்சி நகரில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தை கிளர்ச்சியாளர்கள் அடித்து நொறுக்கினர்.
அப்போது கிளர்ச்சியாளர்களை அமெரிக்க ராணுவத்தினர் கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஸ்கர்துவில் செயல்படும் ஐநா அலுவலகம், ராணுவப் பள்ளி, எஸ்.பி. அலுவலகத்துக்கும் கிளர்ச்சியார்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
















