பிரதமர் மோடி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், புதுச்சேரியின் வளர்ச்சியின் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என தெரிவித்தார்.
மாநில வளர்ச்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பிரதமரின் மோடியின் ஆசியாலும், உருதுணையாலும் செய்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
பதுசேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், எனினும மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே மாநில அந்தஸ்தை பிரதமர் மோடி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ரங்கசாமி குறிப்பிட்டார்.
















