அமெரிக்கா – இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலில், ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நெஜாத் கொல்லப்பட்டார்.
கடந்த 2005 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் ஈரானின் 6-வது அதிபராக பதவி வகித்தவர் மஹ்மூத் அஹ்மதி நெஜாத். இவர் உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை அழிக்க வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பியவர் ஆவார்.
அரசியல் காரணங்களால் முன்னாள் ஈரான் அதிபரான மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் இணைந்து, மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் வீட்டின் மீது ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தின. இதில் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் முன்னாள் ஈரான் அதிபரான மஹ்மூத் அஹ்மதி நெஜாத் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
















