சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியாகினார்.
டேங்க்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், அவருடைய நண்பருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் விக்ரம் மற்றும் அவரது நண்பரான உதய் பிரகாஷ் தூக்கிவீசப்பட்டனர்.
இந்த விபத்தில் விக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு வாகனத்தில் வந்த நபர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
















