ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சகோதரியை தனது தோளில் தூக்கி சகோதர் கொண்டாடியது நெட்டிசன்களை சிலிர்க்க வைத்துள்ளது.
வீரர்களின் பூமி என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமன் பலோடி. இவரது சகோதரி தற்போது ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ராணுவ உடையில் இருக்கும் சகோதரியை தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அமன் பலோடி கொண்டாடி மகிழ்ந்தார். உலகம் அவரை ஒரு அதிகாரியாகப் பார்க்கும், ஆனால் எனக்கு கனவை நனவாக்கிய அன்புத் தங்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கையின் கனவு நிறைவேறியதை அண்ணன் கொண்டாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லைக்குகளை அள்ளி வருகிறது.
















