திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சூழலை கருத்தில் கொண்டுதான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜரான மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மீண்டும் வருத்தம் தெரிவித்தார்.
மலை உச்சியில் பூஜை செய்ய அனுமதி அளித்து ஆட்சியர் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
அதற்கு உயரதிகாரிகளை கேட்டுதான் தெரிவிக்க முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.
ஆட்சியர் எந்த அதிகாரியிடம் விளக்கம் கேட்க வேண்டும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி,தீபம் ஏற்றும் விவகாரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்து முன்னணி போராடி வருவதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐந்து பேரின் பெயரை வழங்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
















