திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் - காடேஸ்வரா சுப்பிரமணியம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!
Sep 20, 2026, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் – காடேஸ்வரா சுப்பிரமணியம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 08:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை பின்பற்றாததால் பல்வேறு இந்து அமைப்புகள் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை மற்றும் ஆண்டாள் பேரவை சார்பில் கிரிவலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கிரிவலத்தை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு கிரிவலம் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கையில் வேல் ஏந்தி கிரிவலம் மேற்கொண்டனர். கிரிவலத்தில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் கிரிவலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ருத்ராட்சங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தீபம் ஏற்ற வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய பாஜக மாநில ஆன்மிக பிரிவு தலைவர் ஷெல்வி முருக பக்தர்களின் கிரிவலம் விரைவில் தீபம் ஏற்றும் விழாவாக மாறும் என உறுதி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் முருக பக்தர்களின் எழுச்சியே கிரிவலம் என தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் மேற்கொண்ட கிரிவலம் இரவிலும் தொடர்ந்தது. இரவு நேரத்திலும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கிரிவலம் சென்று, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

Tags: Thiruparankundram hill issueThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestgirivalamthiruparankundram muruganNainar Nagendranthiruparankundram judgementThiruparankundramkadeswara subramaniyamThiruparankundram hill
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம் – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர்!

Next Post

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies