அசாமில் கொட்டி தீர்த்த மழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!
Sep 15, 2026, 10:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2026, 12:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அசாமில் வெள்ள பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், 7 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் பெய்து வரும் கனமழையால் அலக்நந்தா ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி செல்கிறது. ருத்ரபிரயாக் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அலக்நந்தா ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுக்தோ ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 19-ம் தேதி சுக்தோ ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், சலால் நீர்மின் நிலையத்தின் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

செனாப் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், செனாப் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags: assam floodassam death toll riseheavy rainfall in Assamassam rain
Share
Tweet
SendShare
Previous Post

இனறைய தங்கம் விலை!

Next Post

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

Related News

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies