மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்!
Sep 16, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2026, 06:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும், சுற்றுச்சூழல் அனுமதி நிலுவையில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதில், மேகதாது திட்டத்திற்கான ஆய்வு வரம்புகளுக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விண்ணப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரத்துடன் தொடர்புடையது என்பதால், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே மேகதாது திட்டத்துக்கான செயல்பாட்டு வரையறைகள் வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே, இத்திட்டத்திற்கான செயல்பாட்டு வரையறைகள் வெளியிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  இத்திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இன்னும் வழங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

காவிரி வடிநிலப் பகுதியில் புதிதாக கொண்டு வரப்படும் எந்தவொரு திட்டமும், உச்ச நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின்  விதிமுறைகளுக்கு உட்பட்டே மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mekedatu dam's Detailed Project Reportcentral governmentKirti Vardhan SinghMekedatu dam
Share
Tweet
SendShare
Previous Post

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

Next Post

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

Related News

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies