தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மதுபோதையில் இயக்கப்பட்ட காரின் பேனட்டில் போக்குவரத்து காவலர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தொங்கி சென்ற காட்சி வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தில் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவலர்கள் மடக்கினர்.
எனினும் ஓட்டுநர் நிறுத்தாததால், காவலர் தற்காப்புக்காக காரின் முன்பகுதியில் உள்ள பேனட்டை இறுக்கமாக பிடித்துள்ளார்.
இதனை பார்த்த சக காவலர்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் பின்தொடர்ந்து காரை மடக்கி, காவலரை பத்திரமாக மீட்டனர்.
















