பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கருடாழ்வார், நம்மாழ்வார், உற்சவர், மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கு சென்று அர்ஜுன் ராம் மேக்வால் வழிபட்டார்.
அதன்பின்னர் கோயில் யானையிடம் ஆசீர்வாதம் பெற்று, அங்கு இருந்த கோமாதாவை தரிசனம் செய்தார்.
















