ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் விலைகள் உயரும் என, கடல்சார் புலனாய்வு ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழியாக செல்ல முயலும் எந்தவொரு கப்பலுக்கும் தீ வைக்கப்படும் என்றும், ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரான், ஓமனை பிரிக்கும் ஜலசந்தியை சுற்றி, குறைந்தது ஐந்து டேங்கர்கள் சேதமடைந்துள்ளன. இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 150 கப்பல்கள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜலசந்தியில் போக்குவரத்து 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக, விண்ட்வார்டின் மூத்த கடல்சார் புலனாய்வு ஆய்வாளர் மிச்செல் போக்மேன் தெரிவித்துள்ளதாக, அல்ஜெசிரா செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் விலை பீப்பாய்க்கு 73 டாலரை எட்டிய பின்னர், திங்களன்று எண்ணெய் விலை பீப்பாய்க்கு 79.40 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் எண்ணெய் விலைகள் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோர் அதிக விலைகளை செலுத்த உள்ள போதிலும், அமெரிக்க உற்பத்தியாளர்கள் பயனடையக்கூடும் என
கூறியுள்ளனர்.
















