மதுரையில் மாற்றுத் திறனாளி பெண்ணிற்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தங்கத்தில் தாலி வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற என்டிஏ மாநாட்டு திடலில் தனலட்சுமி என்ற மாற்றுத் திறனாளி பெண் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலையை சந்தித்தார்.
அப்போது குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என மாற்றுத் திறனாளி பெண் வேதனை தெரிவித்திருந்தார்.
மேலும் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்றும் மாற்றுத் திறனாளி பெண் தனலட்சுமி கோரிக்கை விடுத்திருந்தார்.
பெண்ணின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்திற்குள், அண்ணாமலை பழைய தங்கத் தாலியை விட எடை அதிகமான புதிய தங்கத் தாலியை வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து கணவரால் தனலட்சுமிக்கு மீண்டும் தாலி அணிவிக்கப்பட்டது.
















