பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பீகார் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல், வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. அதில் பாஜவின் தேசியத் தலைவராக உள்ள நிதின் நபின்,பீகார் மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















