திருச்சி மாநகராட்சி பொது நிதியிலிருந்து வார்டுகளுக்கு எந்த பணிகளும் செய்யவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி பொது நிதி முழுவதையும் பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகளுக்கு பயன்படுத்தி விட்டதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் வார்டுகளுக்கு எந்த பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்ட அரங்கில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் இது குறித்து பேசிய அதிமுக கவுன்சிலர்கள், கூட்டத்தில் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிப்பதில்லை என குற்றம்சாட்டினர். மேலும் மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
















