பள்ளிபாளையத்தில் மனு கொடுக்க வந்த விவசாயியிடம் திமுக எம்பி பிரகாஷ் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு சார்பில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு திமுக எம்பி பிரகாஷ் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் விவசாயி ஒருவர், தடுப்பணை கட்டித் தரக் கோரி மனு அளிக்க வந்தார். ஆனால் அதனை வாங்க மறுத்த எம்.பி பிரகாஷ், எம்எல்ஏ தங்கமணியிடம் போய் கேளுங்கள் என கூறினார்.
விவசாயிடம் பொறுமையாக பேசாமல் அதட்டும் தோனியில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















