பாதுகாப்பு மற்றும் அமைதி நிறைந்த சூழலில் மட்டுமே பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக இருக்கும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கோரக்நாத் கோயிலில் பாரம்பரிய ஹோலி கொண்டாட்டங்களை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், நாட்டின் மூதாதையர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹோலியின் பாரம்பரியத்தை பாதுகாத்து, நல்லிணக்க உணர்வில் அதை ஒப்படைத்ததாகவும், அதை தற்போதைய தலைமுறை சமமான ஆர்வத்துடன் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
















