திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மலர் தூவ வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாநகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
தொடர்ந்து ஆஜரான அறங்காவலர் குழு தரப்பு தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து 2 வார கால அவகாசம் தேவை என தெரிவித்தது.
அதற்கு நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததற்கு அறங்காவலர் குழுதான் காரணமென்பது தெரிய வருவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கலாமே? என கேள்வி எழுப்பினார்.
மேலும் திருப்பரங்குன்றம் கோயில் ராஜா பட்டர் தர்கா நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக கூறிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மலர் தூவ வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் இது குறித்து முடிவெடுத்து தெரிவிக்க அவகாசம் வழங்கி விசாரணையை மார்ச் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















