டி20 உலகக்கோப்பைக்கான 2-வது அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.
இதன் மூலம் நியூசிலாந்து டி20 உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது. இதற்கிடையே, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில், எதிரணியின் சுழற் பந்துவீச்சை சமாளித்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
















