மாநிலங்களவைத் தேர்தல் - அதிமுக,திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்!
Jul 29, 2026, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக,திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2026, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 4 வேட்பாளர்களையும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களையும் நிறுத்த முடியும்.

இதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் தம்பிதுரையும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க சார்பில் அன்புமணியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தம்பிதுரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பா.ம.க சார்பில் போட்டியிடும் அன்புமணி, அதிமுக-வை சேர்ந்த கே.பி.முனுசாமி முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு இடமும், தேமுதிகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் 6 பேரும் போட்டியின்றி தேர்வாக உள்ளது உறுதியாகியுள்ளது.

Tags: Edappadi PalaniswamiThambiduraiajya Sabha electionnominations.Tamil NaduDMKaiadmkanbumani
ShareTweetSendShare
Previous Post

டி 20 உலகக்கோப்பை 2-வது அரையிறுதிப்போட்டி – இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

Next Post

நேபாளத்தில் பொதுத்தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies