தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் பொய் பேசுவதாகவும், அதனை மக்கள் நன்கு அறிவார்கள் என தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டு காலம் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















