இந்திய விமானப் படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் சுமார் நேற்று இரவு 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வருகிறது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ரேடாரில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்ட பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ள விமானப்படை குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
















