கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தடுப்பூசி மற்றும் பயோடெக் மருந்து தொழிலில் மத்திய அரசுக்கு தனது பங்குகளை வழங்கிய மருத்துவர் ஆனந்த குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அனைத்து தடுப்பூசி மற்றும் பயோடெக் மருந்துகள், கால்நடைக்கான தடுப்பூசிகள் மற்றும் 30 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்கிய மருத்துவர் ஆனந்தகுமாருக்கு பொள்ளாச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய்கள் வருவதற்கு முன்பு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் நன்மை தரும் என கூறினார்.
தனது நிறுவனத்தில் பல புதிய தடுப்பு மருந்துகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
மேலும், பல்வேறு தடுப்பூசிகள் மற்றும் பயோடெக் மருந்துகள் மிகக் குறைந்த விலையில் மத்திய அரசால் விற்கப்படுகிறது என அவர் கூறினார்.
















