தாய்கிழவி திரைப்படம் குறித்து ஆழமான கருத்து தெரிவித்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தாய்கிழவி திரைப்படம் குறித்த தங்களது ஆழமான கருத்து பதிவுடன் கூடிய கடிதத்தைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்ததாக தெரிவித்துளளர்.
சமூக மாற்றத்திற்குத் தேவையான கருத்துகளை முன்வைத்து, பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பாரம்பரியத் திரைக்கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்ட “தாய்கிழவி” திரைப்படத்தை தாங்கள் நேரம் ஒதுக்கி பார்வையிட்டு, மனம் திறந்து பாராட்டியது எனக்கும், திரைப்படக்குழுவினருக்கும் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் அளிப்பதாக கூறியுள்ளார்.
சமூக பொறுப்புணர்வுடன் கூறப்பட்ட உங்கள் வார்த்தைகள், இந்த முயற்சியின் அர்த்தத்தையும் மதிப்பையும் மேலும் உயர்த்துகிறது. ஒட்டுமொத்த படக்குழுவினர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
















