சென்னையில் 4 மாநில தேர்தல் பார்வையாளர்களுடன் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அய்யாவு மஹாலில், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் 4 மாநில தேர்தல் பார்வையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் 4 மாநிலங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எப்படி பணியாற்ற வேண்டும்,
பிற மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொரு தொகுதியிலும் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பி.எல்.சந்தோஷ் ஆலோசனை வழங்கினார்.
















