எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு தமிழக செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், முதற்கட்டமாக ஆயிரம் செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து தற்போது ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
















