கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்து செல்லாமல் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில், அழகாபுத்தூர், கிருஷ்ணாபுரம், திருநறையூர், தண்டந்தோட்டம், மாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 3 லட்சம் ஏக்கர் வரை விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்.
அறுவடை செய்யப்பட்டு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்து செல்லாமல் தேக்கமடைந்துள்ளன. மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளதால் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை குவித்து வைப்பதற்கு போதிய இடமில்லாமல் விவசாயிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனால், நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை லாரிகளில் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















