நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சாதி ரீதியிலான அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதியின் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை மதிக்காமலும், அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்காமலும் செயல்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் தனது சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக குமாரபாளையம் தொகுதியை பொறுத்தவரை இரண்டு சமூகத்தை சார்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் தனது சமூகத்தை சார்ந்தவர் மட்டுமே வேட்பாளராக வரவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாக கூறப்படுகிறது.
















