இயற்கை விவசாயத்தை வலுப்படுத்தி, மாநிலங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
தலைநகர் டெல்லியில், விவசாயம், கிராமபுற வளர்ச்சி தொடர்பான இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீண்ட கால வளர்ச்சி பயணத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.
விவசாயம் நமது பொருளாதாரத்தின் முக்கிய தூண் எனவும் அவர் குறிப்பிட்டார். நமது நாட்டில் உள்ள மாறுபட்ட காலநிலை சவால்களையும் விவசாயிகள் சமாளிக்க வேண்டும் என கூறிய அவர், தமிழகம், கேரளம் மாநில விவசாயிகள் நன்மைக்காக தேங்காய்க்கு பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
















