நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள எஸ்.ஏ.தர்மாதிகாரிக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நாட்டிலேயே பழமையான சென்னை உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த மரபுகளை பாதுகாத்து வலுப்படுத்துவதே தனது முதல் கடமை என்று தெரிவித்தார்.
வழக்குகளை தேவையின்றி தள்ளிவைக்க கேட்காமல், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நவீனப்படுத்த வேண்டும் எனவும், இளம் வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் தர்மாதிகாரி தெரிவித்தார்.
















