திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற பனை திருவிழாவில் கடைகளின் பெயர்கள் தமிழில் இல்லாததால் மக்கள் குழப்பமடைந்தனர்.
பனைத் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக நபார்டு வாங்கி சார்பில் பனை திருவிழா நடைபெற்றது.
இதனை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா தொடங்கி வைத்தார்.
அப்போது கடைகளில் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் மக்கள் குழப்பமடைந்தனர்.
மேலும் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















