நாமக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை, மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அவற்றை தீயிட்டு அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மாநகராட்சி குப்பை கிடங்கில் புகையிலை பொருட்கள் அனைத்தும் தீயிட்டு அழிக்கப்பட்டன.
















