திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மது போதையில் காரை ஓட்டிச்சென்று, லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
தாராபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவர், தனது உறவினரின் உடல்நிலையை பார்க்க கோவைக்கு சென்றுவிட்டு, திரும்பியபோது தனது காரை மது போதையில் ஓட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது முன்னால் சென்ற பொக்லைன் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனோஜ் உட்பட இருவர் படுகாயமடைந்தனர்.
இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















