நாங்குநேரி கொலை சம்பவத்திற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கிராம மக்களை சந்திப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் சென்றனர்.
அப்போது அவர்களை வழிமறித்த கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முக்கிய குற்றவாளி திமுகவினரின் உறவினர் என தெரிவித்த பொதுமக்கள், கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
















