மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவும் கனடாவும் எரிவாயு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தற்போது 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட் கியூபிக் மீட்டர் எரிவாயுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
அவற்றில் சுமார் 60 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட் கியூபிக் மீட்டர் அளவிலான எரிவாயுவை கத்தார் நாட்டிலிருந்து இந்தியா வாங்குகிறது.
இந்த நிலையில் மேற்கு ஆசியாவில் மோதல் அதிகரித்து வருவதால், எரிசக்தி ஆதாரங்களுக்காக பிற நாடுகளை இந்தியா ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்க ஆஸ்திரேலியாவும், கனடாவும் எரிவாயு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு ஆகியவற்றுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கப்பல்களுக்கான காப்பீட்டை பெறுவதற்காக அமெரிக்காவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 8 வாரங்களுக்கான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய இருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















