பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடரும் மோதலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
சுமாா் 2,600 கி.மீ. நீளமுள்ள எல்லைக்கோட்டின் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் இரு நாட்டு வீரா்களும் கனரக ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுவரை ஆப்கானிஸ்தானில் 1,15,000 பேரும், பாகிஸ்தானில் 3,000 பேரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
இருதரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சா்வதேச நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
















