திருவள்ளூர் அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் அருகே உள்ள ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் இவர்களது மகன் சீனிவாசன் அதிகாலை வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















