சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே டிவியில் தனக்கு பிடித்த பாடலை வைக்காததால், கணவருடன் கோபித்து கொண்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனியாபுரி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் – புவனேஸ்வரி தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், புவனேஸ்வரி மளிகைக் கடையில் பணியாற்றி வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இருவரும் வீட்டில் இருந்த நிலையில், டிவியில் தனக்கு பிடித்த பாடலை வைக்குமாறு கணவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், கணவர் பாடலை வைக்காததால் கோபத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















