சேலம் மாவட்டம் பவளத்தானூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் படுஜோராக சூதாட்டம் நடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 47 இடங்களில் திமுகவினர் சூதாட்டத்தை முன் நின்று நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஏஜெண்டாக செயல்படுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கமிஷனாக பெறுகின்றனர்.
இதை கண்டுகொள்ளாமல் இருக்க போலீசாருக்கும் கமிஷன் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் தகவலளித்த நிலையில் நடவடிக்கை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டு இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
















