சென்னையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கட்சியில் இணைந்தவர்கள் அனைவரும் உடனடியாக உறுப்பினர் அடையாள அட்டை பெற்று களப்பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். 2026 மட்டுமல்லாது 2031ஆம் ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















