மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், ஒரு நாளைக்கு 9 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக ஜெகதாம்பிகா பால் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை நடவடிக்கைகளை தற்காலிகமாக பொறுப்பேற்று வழிநடத்திய அவர், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.
அவையை நடத்த ஒரு மணி நேரத்திற்கு ஒன்றரை கோடி ரூபாயும், ஒவ்வொரு நிமிடமும் இரண்டரை லட்சம் ரூபாயும் செலவாவதாக குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், இது பொறுப்பற்ற செயல் என்றும் ஜெகதாம்பிகா பால் குற்றம் சாட்டினார். எனினும் அமளி தொடர்ந்ததால், மக்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
















